Sunday, January 1, 2012

2012 Top 10


முல்லை பெரியாறு பிரச்சனையையோ, கூடங்குளம் அணு உலை சிக்கலையோ தீர்த்து வைக்கும் இடத்தில் நாம் இல்லை. ஆனால், நிச்சயம் கீழ் கண்டவற்றில் சிலவற்றை நம்மால் நிச்சயம் நிறை வேற்ற முடியும். 2012 இல் அதை முயற்சிப்போமே...

# பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை குறைத்துக் கொள்ளலாம்.

# ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டுவதை தவிர்க்கலாம்.

# இரவு நேரங்களில் காரில் வெகு தூர பயணங்களை (self driving) தவிர்க்கலாம்.

# மாதம் ஒரு நல்ல புத்தகத்தை வாங்கலாம்/வாசிக்கலாம்.


# ரோட்டில் போகும் போதும், வரும் போதும் குப்பைகளை எறிவதை தவிர்க்கலாம்.


# வருடத்திற்கு ஒரு முறையாவது ஒரு ஏழை குழந்தையின் படிப்பிற்கு முடிந்ததை உதவலாம்.


# பெற்றோர்களை விட்டு வெளி ஊர்களில் வாழ்பவர்கள் அவர்களுக்கு பணம் அனுப்புவதை மட்டும் கடமை என எண்ணி விடாமல் அவ்வப்போது சென்று அவர்களுடன் ஓரிரு நாட்கள் தங்கி இருந்து கவனித்துக் கொள்ளலாம்.


# குழந்தைகளுக்கு உடற் பயிற்சியாக அமையக்கூடிய பழைய விளையாட்டுக்களை சொல்லிக் கொடுக்கலாம்.


# நாமும் தினமும் ஒரு முறையாவது ஒரு மணி நேரத்திற்கும் குறையாமல் உடற் பயிற்சி/நடை பயிற்சி செய்வதை வழக்கமாக கொள்ளலாம்.


# சேமிப்பு. இதுவும் அவசியம். அதே நேரத்தில், வாய்ப்பும் வசதியும் இருந்தால் நாலு இடங்களுக்கு சென்று வருவது மனதையும் அறிவையும் விசாலமாக்கும். முயற்சிக்கலாமே.


share on:facebook

3 comments:

CS. Mohan Kumar said...

நல்ல விஷயங்களா சொல்லிருக்கீங்க. நல்லது நன்றி

அப்பாதுரை said...

உண்மை. பெற்றோர்கள் பற்றிச் சொல்லியிருப்பது வதைக்கிறது.. ஹ்ம்ம்ம்.

(அது சரி.. பிரச்னை இருக்குற இடத்துல இருந்தா தீர்த்து வச்சுருவீங்களா? :)

Sankar Gurusamy said...

சிறப்பான சிந்தனைகள்.. முயற்சித்தால் நிச்சயம் முடியும்.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.com/

Post a Comment