Wednesday, May 2, 2012

ஊர் உலகமெல்லாம் சண்டை போடும் அமெரிக்காவில் வீட்டில் சண்டை போட முடியாது.



ஊர் உலகமெல்லாம் வழிய போய் சண்டை போடும் அமெரிக்காவில் நாம் வீட்டிற்க்குள் சண்டை போட முடியாது. ஆம், நாலு சுவத்துக்குள்ள நம்ம சண்டை நடந்தாலும் அதை பக்கத்து வீட்டுகாரன் பார்த்தால் உடனே 911 கால் செய்து விடுவார்கள். டொமஸ்டிக் வயலன்ஸ் என்று ரிப்போர்ட் ஆனால் பெரும்பாலும் உடனடியாக காப்பு தான். 

அதே போல் அலுவலகத்திலோ அல்லது வேறு எங்குமோ ஒருவர் செய்கை நமக்கு பிடிக்க வில்லையென்றால் கூட அல்லது ஒருவருடன் பிரச்னை என்றால் அவருடன் நீங்கள் சண்டை போடலாம். ஆனால், முகத்தில் நாம் கோவத்தை காண்பிக்க கூடாது. சிரித்துக் கொண்டே தான் அவருடன் சண்டை போட வேண்டும்(அதாவது அட்லீஸ்ட் உணர்சிகளை காட்டாமல் இருக்க வேண்டும்). இல்லையென்றால் அப்யூஸ் என்று குற்றம் சாட்டி விடுவார்கள்.

நாம் பெற்ற குழந்தை என்றால் கூட அவர்கள் மீது நமக்கு ஓரளவு தான் உரிமை. அதாவது நம் குழந்தை தப்பு செய்தாலோ, சரியாக படிக்கவில்லை என்றாலோ அவர்களை அடிக்க கூட முடியாது. அப்படியே அடித்தாலும் அதை அவர்கள் வெளியில் சொல்லாத வரை ஒன்றும் பிரச்னை இல்லை. பள்ளி ஆசிரியரிடமோ வேறு யாரிடமோ சொல்லிவிட்டால் அங்கிருந்தே 911 கால் போய் விடும். இம்மாதிரியான சிக்கல்கல்களில் பெரும்பாலும் இந்தியர்கள் மாட்டிக் கொள்வதுண்டு. அதாவது இந்நாட்டு சட்ட திட்டங்கள் தெரியாததாலும் நம் குழந்தை மீது நமக்கு இல்லாத உரிமையா என்ற நினைப்பிலும் கொஞ்சம் அதிகப் படியாக நடந்து கொண்டால் பின்னர் சிக்கல் தான்.

அதே போல் முகம் தெரியாத சிறுவர் சிறிமியரிடம் இங்கு ஓரளவு தான் நட்பாக பழகலாம். நம்மூர் போல் தெரியாத குழந்தையை ஒரு பொது இடத்திலோ/பார்க்கிலோ மிக அழகாக இருக்கிறது என்று பார்த்து சிரித்தாலோ கொஞ்சினாலோ அதன் பெற்றோர்களுக்கு சந்தேகம் வந்து விடும். அதற்க்கு காரணம் இங்கு குழந்தைகளை கெட்ட செயலுக்காக ஒரு சில கயவர்கள் கடத்துவதும் அல்லது கட்டாயப் படுத்துவதுமே காரணம். அம்மாதிரி செய்து தண்டனை பெற்றவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் தண்டனை முடிந்து வெளியே வந்தால் கூட அவர்களுக்கு எலக்டிரானிக் கருவிகளை காலில் கட்டி விட்டு விடுவார்கள். அவர்களின் நடமாட்டம்/நடவடிக்கைகளை கண்காணிக்க. 

எனக்கு பெர்சனாலாக நடந்த ஒரு சம்பவம். அப்போது மினசோட்டாவில் நாங்கள் இருந்த போது என் குழந்தை ஒரு பார்க்கில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் வயதுடைய (சுமார் 3 -4 வயது) ஒரு குழந்தையும் எங்களுடன் சேர்ந்து விளையாட ஒரு கட்டத்தில் நாங்கள் மூவரும் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ வந்த அக்குழந்தையின் தாய் என்னை பார்த்து சத்தம் போட ஆரம்பித்து விட்டார். யார் நீ? நீ ஏன் என் குழந்தையுடன் விளையாடுகிறாய்? உன் வீடு எங்கே என்று அநேகமாக கம்பிளைன்ட் செய்யும் அளவுக்கு போய் விட்டார். நான் என் குழந்தை அங்கு விளையாடுவதை காண்பித்து இது எங்கள் அபார்ட்மென்ட் பார்க் எனவும் வேண்டு மென்றால் அபார்ட்மென்ட் மானேஜரை கேளு என்று கூறிய பின் தான் அவருக்கு என் மேல் இருந்த சந்தேகம் தீர்ந்தது.

இம்ம்...நல்ல விசயங்களை பகிரும் போது இது மாதிரி சம்பவங்களையும் பகிர தானே வேண்டும்.   

share on:facebook

5 comments:

துளசி கோபால் said...

ஃபிசிகல், எமோஷனல், வெர்பல், மெண்ட்டல் இப்படி பல அப்யூஸ்கள் இருக்கு. நாம்(தான்) கவனமாக இருக்கணும்!

CS. Mohan Kumar said...

யப்பா ! இந்த தடைகள் சில விஷயத்தில் (சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பு) எனினும் நீங்கள் சொல்லும் அனுபவம் பயமா தான் இருக்கு

ப.கந்தசாமி said...

நல்லவேளை, நான் அமெரிக்காவில் செட்டில் ஆகவில்லை.

அமுதா கிருஷ்ணா said...

அடப்பாவமே..சின்ன குழந்தைகளை பார்த்து சிரிக்க கூட யோசிக்க வேண்டுமா? போச்சுடா..கஷ்டம் தான்.

இராஜராஜேஸ்வரி said...

ஊர் உலகமெல்லாம் வலிய போய் சண்டை போடும் அமெரிக்காவில் நாம் வீட்டிற்க்குள் சண்டை போட முடியாது.

ரொம்ப கஷ்டம்...

Post a Comment